இந்தியா

டெல்லி மக்களுக்கு செய்யும் துரோகம்: கெஜ்ரிவால் மனைவி ஆதங்கம்

Published On 2024-03-22 16:09 GMT   |   Update On 2024-03-22 16:09 GMT
  • கெஜ்ரிவாலை 6 நாள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.
  • அவரது வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றார் சுனிதா.

புதுடெல்லி:

மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அதன்பின், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அமலாக்கத் துறை சார்பில் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு 6 நாள் விசாரிக்க சிபிஐ சிறப்பு கோர்ட் அனுமதி அளித்தது.

இந்நிலையில், கெஜ்ரிவால் மனைவி சுனிதா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி தனது அதிகார ஆணவத்தால் 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரியை கைதுசெய்து, அனைவரையும் நசுக்கப் பார்க்கிறார். இது டெல்லி மக்களுக்கு செய்யும் துரோகம். உங்கள் முதல் மந்திரி எப்போதும் உங்களுடன் நின்றவர். உள்ளே (சிறையில்) இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, அவருடைய வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எல்லாம் தெரியும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News