இந்தியா

டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவை பாதிப்பு

Published On 2024-02-17 09:08 GMT   |   Update On 2024-02-17 09:08 GMT
  • டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
  • ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் சரக்கு ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. ஜாகிரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மீட்பு பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ரயில்வே போலீசார் மீட்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில ரயில்கள் வேறு பாதையில் திசை திருப்பி அனுப்பப்படுகிறது.

மேலும் இன்று, டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் திருமண விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பந்தல் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News