இந்தியா

அரசு பங்களாவை 6 வாரத்தில் காலி செய்ய சுப்பிரமணியசாமிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-09-15 04:25 GMT   |   Update On 2022-09-15 04:25 GMT
  • சுப்பிரமணியசாமிக்கு டெல்லியில் 2016-ம் ஆண்டு அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.
  • அரசு பங்களாவை மீண்டும் ஒதுக்கித்தர கோரி சுப்பிரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.

புதுடெல்லி :

கடந்த ஏப்ரல் மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சுப்பிரமணியசாமிக்கு டெல்லியில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அந்த அரசு பங்களாவை மீண்டும் ஒதுக்கித்தர கோரி சுப்பிரமணியசாமி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நீதிபதி யஷ்வந்த் வர்மா விசாரித்தார்.

சுப்பிரமணியசாமி சார்பில் ஆஜரான வக்கீல் ஜெயந்த் மேத்தா, மனுதாரருக்கான இசட் பிரிவு பாதுகாப்பை கருத்தில்கொண்டு மீண்டும் அதே பங்களாவை ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், சுப்பிரமணியசாமிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தொடரும். ஆனால் அதே அரசு பங்களாவை ஒதுக்கித்தர முடியாது என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் முக்கிய பிரமுகர்களுக்கு அரசு பங்களா ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவு எதுவும் இல்லை. எனவே, சுப்பிரமணியசாமிக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை 6 வாரங்களுக்குள் எஸ்டேட் அலுவலகரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

Similar News