அமித் ஷா வெளியிட்ட பாஜக-வின் இறுதிக்கட்ட தேர்தல் அறிக்கை: விமர்சித்த ஆம் ஆத்மி, காங்கிரஸ்
- 50 ஆயிரம் வேலைகள் உருவாக்கப்படும். 20 லட்சம் சுய-தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- மூன்று வருடத்திற்குள் யமுனை நிதி சுத்தப்படுத்தப்படும்.
dடெல்லி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இணையாக பாஜக-வும் பல்வேறு இலவச வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை இரண்டு கட்டமாக வெளியிட்டது. இன்று 3-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் அறிக்கையை அமித் ஷா வெளியிட்டார்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கியம்சங்கள்:-
* 13 ஆயிரம் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்திற்குள் சட்ட வழிகளின்படி கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுவோம்.
* பாகிஸ்தானில் இருந்து வந்து காலனிகளில் வசித்து வரும் அனைத்து அகதிகளுக்கும் சொத்துக்களுக்கான (வசிக்கும் வீடுகள் உள்பட) உரிமை அங்கீகாரம் வழங்கப்படும்.
* gig தொழிலாளர்களுக்கான நல வாரியம் தொடங்கப்படும். 10 லட்சம் வரை சுகாதார காப்பீடும், 5 லட்சம் வரை விபத்து காப்பீடும் வழங்கப்படும். கூடுதல் நலன்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
* 50 ஆயிரம் வேலைகள் உருவாக்கப்படும். 20 லட்சம் சுய-தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* 1700 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ளவர்கள் வீடுகள் கட்டுவதற்கு, நிலங்களை விற்பதற்கு, வாங்குவதற்கு உரிமையாளர்களுக்கான உரிமை வழங்கப்படும்.
* 100 சதவீதம் மின்சார பேருந்து என்பதை நோக்கமாக கொண்டு 13 ஆயிரம் பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
* மூன்று வருடத்திற்குள் யமுனை நிதி சுத்தப்படுத்தப்படும்.
* கையால் மலம் அள்ளும் முறை 100 சதவீதம் ஒழிக்கப்படும்.
அம் ஆத்மி கட்சி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் கூறியதாவது:-
பாஜக மூன்று கட்டங்களாக அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அவர்களின் கடைசி பகுதியாக இருக்கும் என நம்புகிறோம்.
பூட்டிய கடைகளை மீண்டும் திறப்போம் என அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர்கள்தான் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. கடைகள் திறந்திருக்கும்போது கடைகள் முன்னாள் துப்பாக்கி நடத்தப்பட்டதுபோல் தெரிகிறது. மிரட்டி பணம் பறிக்கும் மிரட்ல்களை கூட பெறுகிறார்கள். இது தொடர்பாக அமித் ஷா பேச வேண்டும். டெல்லியின் சட்டம் ஒழுங்கு குறித்து பேச வேண்டும்.
அவர்கள் உறுதியளித்த அளவுக்கு வேலைகளை உண்மையிலேயே வழங்க முடிந்தால், அவர்கள் கட்டுப்பாட்டில் 20 மாநிலங்களில் அவர்கள் ஏன் இந்த வேலைகளை வழங்குவதில்லை? டெல்லியில்தான் மிகக் குறைந்த வேலையின்மை உள்ளது.
டெல்லியில் ஏற்கனவே 7,700 பேருந்துகள் ஓடுகின்றன, இதுவே அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள். இந்த ஆண்டு இறுதிக்குள் அவற்றை 100% மின்சாரத்தில் இயக்க திட்டமிட்டுள்ளோம். பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன.
இவ்வாறு பிரியங்கா கக்கார் தெரிவித்துள்ளார்.
கஸ்தூர்பா நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கூறியதாவது:-
எந்தவொரு பிரச்சனையையும் கெஜ்ரிவால் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை அல்லது அதற்கான வேலையை செய்யவும் இல்லை. ஏராளமான திட்டங்கள் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு விரும்பியிருந்தால் அவர்கள் டெல்லிக்கு மின்சார பேருந்துகள கொடுத்திருக்க முடியும்.
மெட்ரோ பாதையை விரிவுப்படுத்தியிருக்க முடியும். காற்று மாசு பிரச்சனையை கூட முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும். உண்மையிலேயே டெல்லிக்கு நல்லது செய்ய விரும்பியிருந்தால், ஆட்சியில் இல்லை என்றாலும், நன்றாக பணியாற்றி நற்பெயரை பெற்றிருப்பார்கள்.
இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான மணீஷ் சிசோடியா கூறியதாவது:-
டெல்லியில் 2.5 கோடி மக்கள் தொகை உள்ளது. நீங்கள் (அமித் ஷா) அரசு அமைப்பதற்கு பதிலாக 50,000 வேலைவாய்ப்புகளை மட்டுமே வழங்குவதாகப் பேசுகிறீர்கள். அதாவது உங்களிடம் எந்த திட்டமும் இல்லை. அமித் ஷா ஏன் டெல்லி மக்களை கேலி செய்கிறார்?
அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும், அதனால்தான் நீங்கள் விரும்பும் வாக்குறுதிகளை அளிக்கிறீர்கள். டெல்லிக்கு மின்சார பேருந்துகள் கொண்டு வருவதாக நீங்கள் வாக்குறுதி அளிக்கிறீர்கள். டெல்லி மின்சார பேருந்துகள் குறித்த்து யாரும் உங்களுக்கு நன்றாக விளக்கவில்லை.
நாட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் டெல்லி மின் பேருந்துகளின் தலைநகராக மாறிவிட்டது. குறைந்தபட்சம் இன்று அமித் ஷா தங்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் முகத்தை அறிவித்திருக்கலாம்.
இவ்வாறு சிசோடியா தெரிவித்துள்ளார்.