இந்தியா
null

டெல்லியில் கனமழை.. விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

Published On 2024-06-28 01:49 GMT   |   Update On 2024-06-28 02:15 GMT
  • தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
  • மேற்கூரை இடந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் காயம்.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூன் 27) காலை முதலே மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழந்தது. இன்று காலை அரங்கேறிய இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.


மூன்று தீயணைப்பு துறை வாகனங்கள் விமான நிலையத்தை சென்றடைந்தன. முதற்கட்ட தகவல்களின் படி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், கனமழை காரணமாக அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.


வாட்டி வதத்த வெயில் காரணமாக கடந்த சில வாரங்களாக தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி சிக்கியது. தற்போது டெல்லி முழுக்க கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. 

Tags:    

Similar News