இந்தியா
பீகாரில் அதிரடி சோதனை: லாலு பிரசாத் மகள்கள் வீடுகளில் ரூ.70 லட்சம்-தங்க நகைகள் பறிமுதல்
- தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் 3 மகள்கள் வீடுகளில் அவர்களுக்கு சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
- லாலு பிரசாத் யாதவ் மகள்கள் வீடுகளில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
பாட்னா:
லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வே பணியில் சேர அவரது குடும்பத்தினர் பெயரில் நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரிதேவி, அவரது மகனும் பீகார் துணை-முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் 3 மகள்கள் வீடுகள் அவர்களுக்கு சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
இந்த சோதனையில் லாலு பிரசாத் யாதவ் மகள்கள் வீடுகளில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கப்பணம், 1 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்க கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளது.