இந்தியா

லட்சம் சித்தராமையா வந்தாலும் நான் பயப்பட மாட்டேன்- குமாரசாமி ஆவேசம்

Published On 2024-10-06 05:00 GMT   |   Update On 2024-10-06 05:00 GMT
  • மூடா நில முறைகேடு விவகாரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது.
  • அரசு பற்றி விவாதிப்பதில் அர்த்தம் இல்லை.

பெங்களூரு:

மத்திய மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஜனதா தளம் (எஸ்) கட்சி பலமாகுமா? அல்லது பலவீனம் அடையுமா? என்பதை கடவுள் முடிவு செய்வார். ஆனால் முதல்-மந்திரி சித்தராமையா முதலில் தனது பிரச்சனையை சரி செய்து கொள்ள வேண்டும். என்னை யாரும் அச்சுறுத்த முடியாது. நான் யாரை கண்டும் பயப்பட மாட்டேன். நான் கடவுளுக்கு மட்டுமே பயப்படுகிறேன். சித்தராமையாவை போன்று லட்சம் பேர் வந்தாலும் நான் பயப்பட மாட்டேன்.

நான் அரசியலில் சித்தராமையாவின் நிழலில் வளர்ந்தவனா?. சொந்த உழைப்பு, கட்சி தொண்டர்களின் உழைப்பால் நான் அரசியலில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன். அதனால் என்னை யாராவது மிரட்ட முடியுமா?. என் மீது எத்தகைய வழக்கு போட்டாலும் மிரட்ட முடியாது. என்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த வேலைகள் எல்லாம் என்னிடம் நடைபெறாது. என் மீது பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு போட்டுள்ளனர். இதற்கு காலமே பதில் சொல்லும். மூடா நில முறைகேடு விவகாரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. அதனால் இந்த அரசு பற்றி விவாதிப்பதில் அர்த்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News