இந்தியா
முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு திடீர் உடல்நலக் குறைவு- கொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி
- லைப் மிஷனில் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தை மீறியதாக சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.
- சிவசங்கருக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர்.
இவர் மாநில அரசின் முதன்மை வீட்டுத் திட்டமான லைப் மிஷனில் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தை மீறியதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, சிவசங்கரை கைது செய்தது.
இந்த வழக்கில் கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 21-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிவசங்கருக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், கொச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.