போலி ஐஏஎஸ் வழக்கு: 21-ந்தேதி வரை பூஜா கெத்கரை கைது செய்யக் கூடாது- நீதிமன்றம்
- யுபிஎஸ்சி ஜூலை 31-ந்தேதி பூஜா கெத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது.
- விசாரணைக்காக கைது செய்யப்பட்ட வாய்ப்புள்ளதால் முன்ஜாமின் கேட்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
புனேவைச் சேர்ந்த பூஜா கெத்கர், பயிற்சி பெற்று வரும்போதே ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு ஓபிசி மற்றும் உடல் ஊனம் வசதி பெற்றது என அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறப்பட்டன.
விசாரணை முடிவில் யுபிஎஸ்சி (Union Public Service Commission) பூஜா கெத்கரின் ஐஏஎஸ்-ஐ ரத்து செய்தது. மேலும் தேர்வு எழுத தடைவிதித்தது.
இதற்கிடையே இந்த புகார் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார்.
பூஜா கெத்கரின் மனு நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆகஸ்ட் 21-ந்தேதி வரை கைது செய்யாமல் இருக்க இடைக்கால பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டது. டெல்லி போலீஸ் மற்றும் யுபிஎஸ்சி ஆகியவற்றிற்கு இது தொடர்பாக நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.
பூஜா கெத்கர் பதில் அளிக்க அவகாசம் கேட்டிருந்த நிலையில், நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. அத்துடன் இந்த வழக்கை ஆகஸ்ட் 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
பூஜா கெத்கர் தனது பெற்றோர் பெயர்களை மாற்றி கூறியிருந்ததாகவும் யுபிஎஸ்சி தெரிவித்திருந்தது.
ஜூலை 31-ந்தேதி யுபிஎஸ்சி பூஜா கெத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது. அத்துடன் எதிர்காலத்தில் தேர்வு எழுதுவற்கு தடைவிதித்திருந்தது.
ஆகஸ்ட் 1-ந்தேதி செசன்ஸ் கோர்ட் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. பூஜா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அது குறித்து விசாரணை தேவைஎனத் தெரிவித்திருந்தது.