இந்தியா

காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் தொடங்கியது

Published On 2024-08-30 04:50 GMT   |   Update On 2024-08-30 04:50 GMT
  • காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன.
  • 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கி உள்ளது.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய அரசு ரத்து செய்தது. அதோடு அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரித்தது. அங்கு தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.

காஷ்மீரில் தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளை செய்தது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டசபையில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18-ந்தேதியும், 2-ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு 25-ந்தேதியும், 3-ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் மாதம் 1-ந்தேதியும் தோ்தல் நடத்தப்பட உள்ளது.

முதல் கட்ட தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. 24 தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 279 பேர் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன.

அப்போது 35 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மீதமுள்ள 244 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற இன்று பிற்பகல் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று கட்சி மாற்று வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள். இறுதியில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது இன்று மாலை தெரியவரும்.

இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கி உள்ளது. கங்கன், ஹஸ்ரத் பால், லாக் சவுக், ஈத்கா, பத்காம், பீா்வா, கான்சாஹிப், குலாப்கா் (தனி), காலாகோட்-சுந்தா்பானி, நெளஷேரா, ரஜவுளரி (தனி), சுரன்கோட் (தனி), பூஞ்ச் ஹவேலி உள்பட இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

2-ம் கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 7.74 லட்சம் போ் உள்ளனா். கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள 8 தொகுதி களுக்கும் இந்த கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் பிறகு 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறும்.

பதிவாகும் வாக்குகள் அக்டோபா் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Tags:    

Similar News