இந்தியா
கேரளாவில் போலீசார்- மாவோயிஸ்ட் இடையே துப்பாக்கிச்சூடு
- பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்.
- அதிரடிப்படையின் பதில் தாக்குதலில் 2 மாவோயிஸ்டுகள் படுகாயம் அடைந்தனர்.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யன்குளம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கும் மாவோயிஸ்டுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில், பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிரடிப்படையின் பதில் தாக்குதலில் 2 மாவோயிஸ்டுகள் படுகாயம் அடைந்தனர்.