இந்தியா

அட்டாரி வாகா எல்லை

அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு - வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்

Published On 2022-08-15 19:22 GMT   |   Update On 2022-08-15 19:22 GMT
  • அட்டாரி வாகா எல்லை இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
  • இங்கு இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் தேசிய கொடியை இறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக் கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும்.

இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தன்று இந்திய வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீறுநடை போட்டுச்சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர். ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு மக்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

Tags:    

Similar News