அலைகடலென திரண்ட ரசிகர்கள்... பலர் மயக்கம், காயம்... சாலையோரம் குவிந்து கிடந்த செருப்புகள்....
- லட்சக்கணக்காக ரசிகர்கள் குவிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஆங்காங்கே தள்ளுமுள்ளு முற்பட்டது.
- சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து புயல் காரணமாக தாயகம் திரும்ப தாமதமான நிலையில் நேற்று காலை இந்திய அணி டெல்லி வந்தடைந்தது. பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு இந்திய அணியினர் மும்பைக்கு புறப்பட்டனர்.
மும்பை கடற்கரை பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயிண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஊர்வலமாக சென்று வான்கடே ஸ்டேடியத்தை அடையணும். ஆனால் மழையால் ஊர்வலத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கிடந்தனர்.
இதனையடுத்து திறந்தவெளி பேருந்தில் இந்திய வீரர்கள் ஊர்வலத்தை தொடங்கினர். ரசிகர்கள் சூழ பஸ் ஸ்டேடியத்தை நோக்கி நகர தொடங்கியது. சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தில் பயணம் செய்தனர்.
இந்திய அணி வீரர்களை காண லட்சக்கணக்காக ரசிகர்கள் குவிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஆங்காங்கே தள்ளுமுள்ளு முற்பட்டது. அப்போது சிலர் காயம் அடைந்தனர். மேலும் சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அலைகடலென ரசிகர்கள் குவிந்ததால் நரிமன் பாயிண்டில் ஆங்காங்கே காலணிகள் சிதறிக்கிடந்தன.