இந்தியா

இந்திய ரெயிலில் கழிப்பறை அசுத்தம் குறித்த வீடியோ... விமர்சனத்துக்குள்ளான வெளிநாட்டு பெண்

Published On 2024-10-29 10:17 GMT   |   Update On 2024-10-29 10:17 GMT
  • 52 நாடுகளுக்கு சென்றதாக கூறும் இரினா அமெரிக்கா, ருமேனியா மற்றும் கனடாவில் குடியுரிமை பெற்றுள்ளார்.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வீடியோவிற்கு லைக்குகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரும், விசித்திரமான முயற்சிகளில் ஈடுபட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இதில் சில வீடியோக்கள் வரவேற்பை பெற்றாலும், பல வீடியோக்கள் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியின் இந்தியா கேட் பகுதியை சுற்றிப் பார்த்த ரஷியாவை சேர்ந்த பெண்ணிடம் வாலிபர் ஒருவர் நடனம் ஆடும்படி வற்புறுத்தியது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த வாலிபரை கண்டித்ததுடன், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், இந்திய ரெயிலில் வெஸ்டர்ன் கழிப்பறை அசுத்தமாக இருப்பதை வீடியோ ஒன்றை எடுத்து வெளிநாட்டை சேர்ந்த இரினா மோரேனோ வெளியிட்டுள்ளர்.

52 நாடுகளுக்கு சென்றதாக கூறும் இரினா அமெரிக்கா, ருமேனியா மற்றும் கனடாவில் குடியுரிமை பெற்றுள்ளார். அவர் உதய்பூர் சிட்டி - ஜெய்ப்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் ரெயிலில் 2-ம் வகுப்பில் பயணம் செய்துள்ளார். அப்போது ரெயிலின் வெஸ்ட்ர்ன் கழிப்பறை அசுத்தமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இது 52 லட்சம் பார்வைகளை பெற்று வைரலானது.




வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், "நீங்கள் இரண்டாம் வகுப்பில் பயணிக்கிறீர்கள், இது மலிவான படிவங்களில் ஒன்றாகும். உண்மையான படத்தைப் பிடிக்க முதல் வகுப்பில் பயணம் செய்யும்படி நான் உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்," என்றும் மற்றொரு பயனரோ "பயணிகள் ஏன் எப்போதும் இந்தியாவைப் பற்றி எதிர்மறையான விஷயங்களைக் காட்டுகிறீர்கள்? இந்தியாவில் இன்னும் பல சிறந்த இடங்கள் மற்றும் மிகவும் சுகாதாரமான இடங்கள் உள்ளன!!" என்று கூறினார்.

இதனிடையே, முதல் வகுப்பு ரெயிலின் மற்றொரு கழிவறை வீடியோவை இரினா வெளியிட்டுள்ளார்.




Tags:    

Similar News