யானைகளில் ரோந்து செல்லும் வனத்துறை
- காடுகளிலும், அதை சுற்றிய பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி இருக்கும் போது வனத்துறையினர் யானைகள் மீது ஏறி ரோந்து செல்கின்றனர்.
- காடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி இருக்கிறது.
மழை காலத்தில் வனப்பகுதிகளை சுற்றிலும் வெள்ளம் மூழ்கியுள்ள நிலையில் இமயமலை அடிவாரத்தின் தெற்கு பகுதியில் உள்ள தேராய் காடுகளில் வனத்துறையினர் யானைகளில் ரோந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேராய் காடுகளில் மழை காலங்களில் ரோந்து செல்வது வனத்துறையினருக்கு சவாலான பணியாக உள்ளது. காடுகளிலும், அதை சுற்றிய பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி இருக்கும் போது வனத்துறையினர் யானைகள் மீது ஏறி ரோந்து செல்கின்றனர்.
இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், காடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி இருக்கிறது. மேலும் காடு முழுவதும் நாணல்கள் வளர்ந்துள்ளது. அப்போது வனத்துறையினர் பாகன்களை அழைத்து கொண்டு யானைகள் மீது அமர்ந்து காட்டை சுற்றி ரோந்து செல்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் வனத்துறையினரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.