இந்தியா
பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
- கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
- எடியூரப்பாவின் மகன் பிஒய் ராகவேந்திராவை எதிர்த்து ஈஸ்வரப்பா போட்டி.
கர்நாடக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள் என சவால் விட்ட நிலையில், ஈஸ்வரப்பா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹாவேரி தொகுதியில் தனது மகனுக்கு லோக்சபா சீட் மறுக்கப்பட்டதால் ஈஸ்வரப்பா, ஷிமோகாவில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
எடியூரப்பாவின் மகன் பிஒய் ராகவேந்திராவை எதிர்த்து ஈஸ்வரப்பா போட்டியிடுகிறார்.
இதற்கிடையே, கட்சியின் மாநில தலைவரையும், எடியூரப்பாவையும் ஈஸ்வரப்பா கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.