இந்தியா

80 கி.மீ தூரம் டிரைவர்கள் இல்லாமல் ஓடிய சரக்கு ரெயில்: அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்

Published On 2024-02-25 07:22 GMT   |   Update On 2024-02-25 09:31 GMT
  • ஜம்மு காஷ்மீரின் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
  • தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடியது

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

அப்போது ரெயில் தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் ரெயில் டிரைவர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

78 கி.மீ. தூரம் வரை அந்த சரக்கு ரெயில் டிரைவர் இல்லாமல் ஓடிய நிலையில், பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஜம்மு கோட்ட ரெயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News