இந்தியா

தனது மகனை தோற்கடிக்க வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன்: காங்கிரசார் மீது எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு

Published On 2024-11-03 06:35 GMT   |   Update On 2024-11-03 06:35 GMT
  • கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட இதுபோன்ற பரிசு கூப்பன்கள் வழங்கி மக்களை நம்ப வைத்தனர்.
  • இரவோடு இரவாக கிராமங்களுக்கு சென்று காங்கிரஸ் தொண்டர்கள் அத்தகைய பரிசு கூப்பன்களை வழங்கினார்கள்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சென்னபட்டனா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் சென்னபட்டனாவில் ஆளும் காங்கிரஸ் சார்பில் யோகேஷ்வர், பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரணும், முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி மற்றும் சிக்காவியில் பா.ஜனதா சார்பில் பரத் பொம்மை, காங்கிரஸ் சார்பில் முகமது யாசிர் பதான், சண்டூரில் காங்கிரஸ் சார்பில் அன்னபூர்ணா துகாராம், பா.ஜனதா சார்பில் பங்காரு ஹனுமந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் சன்னபட்டனா தொகுதி விருப்ப சந்திரா கிராமத்தில் தனது மகனை ஆதரித்து பேசிய எச்.டி. குமாரசாமி சன்னபட்டனா தொகுதியில் வேட்பாளர்களை கவருவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி பரிசு கூப்பன்களை விநியோகித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட இதுபோன்ற பரிசு கூப்பன்கள் வழங்கி மக்களை நம்ப வைத்தனர்.

இரவோடு இரவாக கிராமங்களுக்கு சென்று காங்கிரஸ் தொண்டர்கள் அத்தகைய பரிசு கூப்பன்களை வழங்கினார்கள். தேர்தல் முடிந்ததும் பணமும் இல்லை. கூப்பனும் செல்லுபடியாகவில்லை. எனவே வாக்காளர்கள் ஏமாற வேண்டாம் என்றார். 

Tags:    

Similar News