இந்தியா
null

எச்.டி.எப்.சி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

Published On 2024-11-04 12:20 GMT   |   Update On 2024-11-04 12:21 GMT
  • எச்டிஎப்சி வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது.
  • எச்டிஎப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்பு.

எச்.டி.எப்.சி வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் சேவை பராமரிப்பு பணி காரணமாக இரண்டு நாட்களுக்கு தலா இரண்டு மணி நேரத்திற்கு யுபிஐ உள்ளிட்ட சேவைகள் இயங்காது என வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ சேவைகள் செயல்படாது என எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.

இந்த பராமரிப்பு காலத்தில் எச்டிஎப்சி வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ரூபே (Rupay) கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், மொபைல் பேங்கிங், ஜி பே, வாட்ஸ் அப் பே, பேடிஎம், மொபிக்கிவிக் உள்ளிட்ட சேவைகளும் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பராமரிப்புப் பணியின்போது எச்டிஎப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News