டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: நகரம் முழுவதும் புகை மண்டலம்
- நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
- காற்றின் மாசு தரம் இருந்தால் மோசமானதாக கருதப்படுகிறது.
டெல்லி:
டெல்லியில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் இன்று மோசமான நிலைக்கு காற்று மாசு சென்றது. காலை 8 மணி நிலவரப்படி காற்றின் தரம் 317 ஆக இருந்தது.
ஆனால் காலை 6 மணி நிலவரபடி டெல்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக்குறியீடு 434 ஆக இருந்தது. இது உலக சுகாதார மையம் பரிந்துரைத்த ஆபத்து வரம்பை விட 59 மடங்கு அதிகமாக உள்ளது. காற்று மாசு அதிகரிப்பால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
காற்றின் அதிக மாசால் நுரையீரல் மற்றும் மூளை பாதிப்பு உண்டாக்கும் அபாயம் ஏற்படும். கடுமையான அளவில் உடல் நலத்தை பாதிக்கும். 200 மற்றும் 300-க்கு இடையில் காற்றின் மாசு தரம் இருந்தால் மோசமானதாக கருதப்படுகிறது.
300-400க்கு இடையில் மிகவும் மோசமானதாகவும், 400-450-க்கு இடையில் கடுமையானது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று ஆனந்தவிஹார் பகுதியில் காற்று மாசு 627 ஆகவும், அலிபூர் பகுதியில் 388, பஞ்சாபிபாக் 319, நரேலா 372, ஆர்.கே.புரம் 268, பவானா 368, ஐ.டி.ஐ. ஷஹ்த்ராவில் 408 ஆகவும் இருந்தது.
சுமார் 200 நகரும் புகை எதிர்ப்பு கருவிகள் மூலம் டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.