இந்தியா

விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் - மத்திய அமைச்சர் நம்பிக்கை

Published On 2024-10-23 14:45 GMT   |   Update On 2024-10-23 14:45 GMT
  • சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது.
  • எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் அண்மையில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.

இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பிற நாடுகளுக்கான விநியோகமும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இத்தகைய சூழல் ஏற்பட்டால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உருவாகும்.

இந்த நிலையில், 'பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "புவிசார் அரசியலில் பதற்றமான சூழல் நிலவி வரும் போதும், உலகில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை. பிரேசில், கயானா போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது."

"இதனால், தடையற்ற கச்சா எண்ணெய் வினியோகம் குறித்து கவலை கொள்ளத் தேலையில்லை. மேலும். கடந்த காலங்களைப்போல், இந்தியா மாற்று வாய்ப்புகளை அடையாளம் கண்டு எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது."

"எனவே, பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து நிலையாக இருக்கும் என்பதோடு. வரும் நாட்களில் விலை குறையும் என்றே நினைக்கிறேன். மேலும், இது என் தனிப்பட்ட கருத்து," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News