ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு- பல மணி நேரம் போராட்டம் வீண்...
- விவசாயத் தொழிலாளியின் ஒன்றரை வயது மகள், தோட்டத்தில் திறந்திருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளார்.
- பல மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஆழ்துளை கிணறு கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களில் மூடப்பட்டு வரும் நிலையில், அதற்குள் விழுந்து பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் 45-50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க பல மணிநேரம் நடைபெற்ற மீட்பு பணி வீணானது.
அம்ரேலியில் உள்ள சுர்கபாரா கிராமத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளியின் ஒன்றரை வயது மகள், தோட்டத்தில் திறந்திருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அம்ரேலி மீட்புக்குழுவினரும், 108 அவசரக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
45 முதல் 50 அடி ஆழத்தில் சிறுமி சிக்கியிருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து 108 அவசர குழு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமிக்கு முதலில் ஆக்ஸிஜனை வழங்கத் தொடங்கியது. மீட்புக்குழுவினர் கேமராக்களைப் பயன்படுத்தி மீட்புப் பணியைத் தொடங்கினர். இதையடுத்து நடைபெற்ற பல மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
முன்னதாக, இச்சம்பவம் குறித்து மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சிறுமியை மீட்க மீட்புக் குழுவினர் தீவிர முயற்சி செய்து வருகிறது. குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் கீழ்நோக்கி சிக்கியுள்ளது. சிறுமியின் முகம் மட்டுமே தெரிகிறது என்றார்.