மயங்கி கிடந்த பாம்பு.. வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து காப்பாற்றிய இளைஞர்- வீடியோ
- வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை யாஷ் தத்வி என்பவர் செய்து வருகிறார்.
- ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக தத்விக்கு ஒரு போன்கால் வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இறந்துபோன பாம்பிற்கு இளைஞர் ஒருவர் தனது மூச்சுக்காற்றை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வதோதரா மாவட்டத்தில் வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை யாஷ் தத்வி என்பவர் செய்து வருகிறார். ஒரு அடி நீளமுள்ள ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக தத்விக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
அந்த இடத்தில் எவ்வித அசைவும் இல்லாமல் விசமில்லாத பாம்பு ஒன்று இருந்துள்ளது. உடனே பாம்பின் வாயில் வாய் வைத்து தத்வி மூச்சுக்காற்று கொடுத்துள்ளார். முதல் 2 முறை மூச்சுக்காற்று கொடுத்தபோதும் அசைவில்லாமல் இருந்து பாம்பு மூன்றாவது முறை மூச்சுக்காற்று கொடுத்தபின்பு உயிர் பிழைத்துள்ளது.
உயிர்பிழைத்த பாம்பு பின்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து தத்வி காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.