இந்தியா

முன்னாள் பிரதமர் தேவ கவுடா 

மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா மருத்துவமனையில் அனுமதி

Published On 2023-02-28 22:55 GMT   |   Update On 2023-02-28 22:55 GMT
  • கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
  • தேர்தலில் டிக்கெட் வாங்குவது தொடர்பாக தேவ கவுடா குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டது.

இதற்கிடையே, ஹாசன் தொகுதியில் தனது மனைவி பவானிக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று ரேவண்ணா கேட்டு வருகிறார். இதற்கு குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அந்த தொகுதியில் கட்சி தொண்டர் ஒருவருக்கு டிக்கெட் வழங்குவதாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தேவ கவுடா குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் வழக்கமான உடல் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். இந்த பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு ஓரிரு நாளில் வீடு திரும்புவேன். எனது உடல்நிலை குறித்து யாரும் பயப்பட தேவை இல்லை என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News