இந்தியா

வெப்ப அலையால் பலர் பலி: தேசிய அவசரநிலையாக அறிவிக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

Published On 2024-05-31 16:29 GMT   |   Update On 2024-05-31 16:29 GMT
  • வெப்ப அலையையும், மிக மோசமான குளிர்க்காற்றையும் தேசிய அவசர நிலையாக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது.
  • இதற்கான சிறப்புக் குழுவை நியமித்து வெப்ப அலைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் மேற்கு மற்றம் மத்திய மாநிலங்களில் கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. பீகார், ராஜஸ்தான், உ.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் மக்கள் சுருண்டு உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வெப்பம் காரணமாக பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி அனூப் குமார் தாந்த் தாமாக இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்ற நிலையில், வெப்ப அலையையும், மிக மோசமான குளிர்க்காற்றையும் தேசிய அவசர நிலையாக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், வெப்ப அலையில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். மாநில முதன்மை செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகளை ஒன்றிணைத்து இதற்கான சிறப்புக் குழுவை நியமித்து வெப்ப அலைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை மற்றும் குளிர் காற்றுக்கு பலியாவது அதிகரித்திருக்கும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இது தொடர்பான பணிகளில் இறங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News