கேரளாவில் கனமழை எச்சரிக்கை: 3 மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்'
- கனமழை வருகிற 26-ந்தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. சில மாவட்டங்களில் மட்டும் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாக புயல் வலுப்பெற்றதன் காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
இந்த கனமழை வருகிற 26-ந்தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கட்டிருக்கிறது.
கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்கக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 204 மில்லிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளாவுக்கு வந்துள்ளது. அந்த குழுக்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தயார் நிலையில் இருக்கிறது.
அது மட்டுமின்றி கடலில் அதிக அலைகள் எழ வாய்ப்பு இருப்பதால் கடலோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கு மாறும், மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.