இந்தியா

கேரளாவில் கனமழை: மலைப்பகுதிகளில் பயணத்துக்கு தடை

Published On 2024-06-27 05:33 GMT   |   Update On 2024-06-27 05:33 GMT
  • சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை.
  • மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக தினமும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் கேரள மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மட்டு மின்றி பல இடங்களில் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை காரணமாக பல மாவட்டங்ளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

கோழிக்கோடு மாவட் டத்தில் பல இடங்களல் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆலப்புழா மற்றும் கண்ணூரில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கோட்டயம் மாவட்டத்தில் சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கேட்டயம், எர்ணா குளம்ஆகிய மாவட்டங்களிலும், கண்ணூர் மாவட்டத்தில் இரிட்டி தாலுகாவிலும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மலைபபகுதிகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் நடப்பு தென்மேற்கு பருவமழை சீசனில் கேரளாவில் அதிகபட்ச மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள் ளது. 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் சராசரியாக 69.6 மில்லிமீட்டரும், அதிகபட்சமாக கோட்ட யத்தில் 103 மில்லிமீட்டரும் மழை பெய்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News