அனைத்து இந்திய மொழிகளுடன் இந்திக்கு பிரிக்கமுடியாத உறவு உள்ளது- அமித் ஷா
- இந்திய மொழிகளும் நமக்கு பெருமையும் பாரம்பரியமும் மிக்கது.
- இந்தி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுடெல்லி:
இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
இதையொட்டி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அனைத்து இந்திய மொழிகளும் நமக்கு பெருமையும் பாரம்பரியமும் மிக்கது. அவற்றை வளப்படுத்தாமல் நாடு முன்னேற முடியாது. அதிகாரப்பூர்வ மொழியான இந்தி அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டுடன் பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு செல்வதற்கும், மேம்பட்ட இந்தியாவின் வளர்ச்சியை நிறைவேற்றுவதற்கும் அதிகாரப்பூர்வ மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.