இந்தியா

'என் மகன் தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்'.. சட்டமன்றத்தில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா தடாலடி

Published On 2024-07-16 14:53 GMT   |   Update On 2024-07-16 14:53 GMT
  • ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால்
  • பாதிக்கப்பட்ட பெண் பேசாமல் இருக்க அவரை கடத்திய குற்றத்திற்காக எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் இந்தியப் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை உருவாக்கியவருமான தேவகௌடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா.

ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இடையிலேயே பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிக்கியதால் ஜெர்மனிக்கு தப்பியோடினார். பிரஜ்வல் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகே இவை வெளிச்சத்துக்கு வந்தன. சமீபத்தில் பிரஜ்வல் நாடு திரும்பிய நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று கூடிய கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் எச்.டி.ரேவண்ணா இந்த விவகாரம் குறித்து காரசாரமாக பேசியுள்ளார். அங்கு அவர் பேசியதாவது,எனது மகன் தவறு செய்திருந்தால் அவனை தூக்கில் போடுங்கள், நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

'கர்நாடக காவல்துறை தலைமை இயக்குனர் அலோக் மோகன் மீதும் ரேவண்ணா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனக்கு எதிராக சில பெண்களை இயக்குநகரகத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் அளிக்க வைத்து அலோக் மோகன் புகார் அளிக்க வைத்துள்ளார்.அவர் தலைமை இயக்குனராக இருப்பதற்கு தகுதியற்றவர்' என்று சட்டமன்றத்தில் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.  ரேவண்ணாவின் பேச்சுக்கு துணை முதலவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பலர் கடனைகளை தெரிவித்தனர். முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருவர் பின் ஒருவராக முன்வந்து புகார் அளித்து வருகின்றனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் பேசாமல் இருக்க அவரை கடத்திய குற்றத்திற்காக எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News