இந்தியா

சட்டவிரோத ஆக்கிரமிப்பு சர்ச்சை.. கிராமத்தினர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு - 2 இஸ்லாமியர்கள் பலி

Published On 2024-09-13 07:01 GMT   |   Update On 2024-09-13 07:05 GMT
  • கிராம மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஜுபாகிர் அலி, ஹைதர் அலி ஆகிய இரண்டு இஸ்லாமியர்கள் குண்டடிபட்டு உயிரிழந்தனர்.
  • கடந்த திங்கள்கிழமை முதலே மக்களை வெளியேற்றி குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில் 3 நாட்களாக பொறுமை காத்த ஊர் மக்கள் நேற்றைய தினம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அசாமில் அரசு நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி அங்கிருந்தவர்களை விரட்ட அரசு அதிகாரிகள் முயன்றபோது அங்கு ஏற்பட்ட மொதலால் கிராமத்தினர் இருவரை போலீசார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள சோனாப்பூர் பகுதியிலஅமைந்துள்ள கோச்தொலி [Kochutoli] என்ற கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி அங்கு வசித்து வந்தவர்களை வெளியேற்றி அவர்களின் குடியிருப்புகளை அரசு அதிகாரிகள் நேற்றைய தினம் புல்டோசர்களால் இடிக்க முற்பட்டனர். 

இதற்கு கிராம மக்கள் மறுப்பு தெரிவித்து போலீசுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் கிராம மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஜுபாகிர் அலி, ஹைதர் அலி ஆகிய இரண்டு இஸ்லாமியர்கள் குண்டடிபட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் குண்டடிபட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிராம மக்கள் கையில் குச்சிகளுடனும் கற்களாலும் தங்களை நோக்கி தாக்குதல் நடத்தியதால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியதாகி விட்டது என்று அரசு அதிகாரி ஒருவர் அங்கு வந்த ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை முதலே மக்களை வெளியேற்றி  குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில் 3 நாட்களாக பொறுமை காத்த ஊர் மக்கள் நேற்றைய தினம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.  கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைத்து இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்.

கோச்தொலி கிராமத்தில் உள்ள மக்கள் ஏற்கனவே ஒருமுறை அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ஆனால் மீண்டும் அவர்கள் அங்கு வந்து குடியேறியுள்ளதாகவும் கூறபடுகிறது. அங்கிருந்து தற்போது வெளியேற்ட்டப்பட்ட 300 முதல் 400 முதலான கிராம மக்கள் அருகில் உள்ள ரெயில்வே டிராக்கில் தஞ்சம் புகுந்ததால் ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே துக்கப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என கூறி வீடுகள் உடனுக்குடன்  இடிக்கப்படுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது புல்டோசர் நடவடிக்கைகளை நீதிபதிகள் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News