இந்தியா

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு? - ராகுல்காந்தி கண்டனம்

Published On 2024-05-06 10:06 GMT   |   Update On 2024-05-06 10:06 GMT
  • நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 2 மருத்துவ மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • 10 லட்சம் ரூபாய் பணத்திற்க்காக நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 2 மருத்துவ மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவர் அபிஷேக் சர்மா, மருத்துவ மாணவர்களான அமித் ஜாட், ரவிகாந்த மற்றும் சூரஜ் குமார், ராகுல் குர்ஜார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் எஸ்.பி அகிலேஷ் குமார் தெரிவித்தார்.

10 லட்சம் ரூபாய் பணத்திற்க்காக நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆள் மாறாட்டம் செய்த புகாரில் இந்த 5 பேரின் மீதும் மீது பல பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்ற செய்தி 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுகளுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.

12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர வேண்டும் என்று கனவு காணும் மாணவர்களாக இருந்தாலும் சரி, அரசு வேலைக்காக போராடும் நம்பிக்கைக்குரிய இளைஞர்களாக இருந்தாலும் சரி, மோடி அரசு அனைவருக்கும் சாபமாகி விட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசின் கையாலாகாத்தனத்தை பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞரும் அவரது குடும்பத்தினரும், இப்போது பேசுவதற்கும் ஆட்சியை நடத்துவதற்கும் வித்தியாசம் இருப்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.

கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களை வினாத்தாள் கசிவிலிருந்து விடுவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையான சூழல் உருவாக்குவோம் என்பது எங்கள் உத்தரவாதம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News