மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில பட்ஜெட்டில் முக்கிய குறிப்பு
- அணை கட்டும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு, வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு.
- கனவு திட்டமான மேகதாது அணையை கட்ட ஏற்கனவே பிரத்யேக அமைப்பு உருவாக்கம். அதற்கு கீழ் 2 தனி அமைப்புகள் செயல்படும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக மாநில அரசு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தமிழக அரசு சம்மதம் இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என திட்டவட்டமாக தழிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று கர்நாடக மாநிலத்தின் 2024-2025-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் மேகதாது அணை குறித்து முக்கிய குறிப்பு இடம் பிடித்துள்ளனர்.
சித்தராமையா தாக்கல் செய்த கர்நாடக மாநில பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு:-
* கனவு திட்டமான மேகதாது அணையை கட்ட ஏற்கனவே பிரத்யேக அமைப்பு உருவாக்கம். அதற்கு கீழ் 2 தனி அமைப்புகள் செயல்படும்.
* சிறப்பு திட்ட மண்டலம், 2 துணை மண்டலங்கள் மேகதாது திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக அமல்.
* தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும்.
* அணை கட்டும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு, வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு.
போன்றவை பட்ஜெட்டில் இடம் பிடித்துள்ளது.