இந்தியா
அசாம் சிறையில் இருந்து 5 விசாரணை கைதிகள் தப்பியோட்டம்...
- ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
- இச்சம்பவம் குறித்து, மாவட்ட நிர்வாகம் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது.
கவுகாத்தி:
அசாமில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 5 விசாரணை கைதிகள், பெட்ஷீட், போர்வை, லுங்கி ஆகியவற்றைப் பயன்படுத்தி 20 அடி உயர சுவரில் ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
மோரிகான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதிகளான சைபுதீன், ஜியாருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் ஆகியோர் நேற்று அதிகாலை 1 மணியளவில் சிறையிலிருந்து வெளியேறி பெட்ஷீட், போர்வை, லுங்கி ஆகியவற்றை கயிறாக திரித்து 20 அடி உயர சுவரில் ஏறி தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து, மாவட்ட நிர்வாகம் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது.
மேலும் பிரசாந்தா சைகியா என்ற ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து குவாஹாட்டியைச் சேர்ந்த இரண்டு உதவி ஜெயிலர்கள் சிறையை நிர்வகிக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.