இந்தியா

கொச்சியில் இயற்கை எரிவாயு குழாயில் ரசாயன கசிவு- துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதி

Published On 2023-04-01 05:51 GMT   |   Update On 2023-04-01 06:51 GMT
  • எரிவாயு எடுத்து செல்லும் குழாயில் இன்று அதிகாலை திடீர் கசிவு ஏற்பட்டது.
  • கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள களமசேரி, காக்கநாடு, எடப்பள்ளி, குசாட் பகுதியில் பலத்த துர்நாற்றம் வீசியது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியில் அதானி நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரியவாயு நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்தில் இருந்து எரிவாயு எடுத்து செல்லும் குழாயில் இன்று அதிகாலை திடீர் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழாயில் இருந்து கசிந்த ரசாயனம் அந்த பகுதி முழுவதும் பரவியது.

இதனால் கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள களமசேரி, காக்கநாடு, எடப்பள்ளி, குசாட் பகுதியில் பலத்த துர்நாற்றம் வீசியது.

கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது பற்றி அறிந்ததும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் நிறுவன அதிகாரிகளும் விரைந்து சென்று குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, குழாயில் இருந்து கசிந்த ரசாயனம், சமையல் எரிவாயுவில் கலக்கப்படும் ரசாயணம் என்றும் ரசாயன கசிவால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும், குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணி விரைவில் முடியும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News