இந்தியா
null

'தீவிர பிரச்சனை' பிரிவில் இந்தியா.. உலக பட்டினிக் குறியீட்டில் பாகிஸ்தானை விட மோசமான நிலை

Published On 2024-10-13 06:46 GMT   |   Update On 2024-10-13 09:07 GMT
  • பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது
  • தீவிரமான பசி- பட்டினி பிரச்சனைகள் கொண்ட நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான உலக பட்டினி குறியீடு அறிக்கையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைட் மற்றும் ஜெர்மனியின் வேர்ல்ட் ஹங்கர் லைஃப் ஆகிய அமைப்புகள் இணைந்து வருடந்தோறும் பட்டினிக் குறியீடு அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் 127 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 19 வது உலக பட்டினி குறியீட்டு அறிக்கையான இதில் இந்தியா 105 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி தீவிரமான பசி- பட்டினி பிரச்சனைகள் கொண்ட நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் குழந்தைகளிடையே, ஊட்டச்சத்துக் குறைபாடு பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாகவும் உள்ளது.

மேலும் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது. இதற்கு முன்னர் வெளிவந்த பட்டினி குறீயிட்டு அறிக்கைகளை மத்திய அரசு நிராகித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News