இந்தியா

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு வரம்பு உயர வாய்ப்பு- நிதி அமைச்சகம் ஆலோசனை

Published On 2024-06-24 04:25 GMT   |   Update On 2024-06-24 04:25 GMT
  • பொருளாதார வளர்ச்சியையும், நுகர்வோர் செலவு மற்றும் அளவீட்டை அதிகரிப்பதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.
  • வரி பலகைகளில் மறு சீரமைப்பு மற்றும் புதிய வரிமுறையில் வரிவிலக்கு வரம்பை அதிகரிப்பது ஆகியவை கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் அடுத்து மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு சில முக்கிய சலுகைகள் அளிக்கப்படும் எனவும், பழைய மற்றும் புதிய வருமான வரி அமைப்புகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக வரி பலகைகளில் மறு சீரமைப்பு மற்றும் புதிய வரிமுறையில் வரிவிலக்கு வரம்பை அதிகரிப்பது ஆகியவை கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

இவை பொருளாதார வளர்ச்சியையும், நுகர்வோர் செலவு மற்றும் அளவீட்டை அதிகரிப்பதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பழைய வருமானவரி அமைப்பின் கீழ் சில வரி அடுக்குகளில் மறுசீரமைப்பு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரூ.15 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெறும் தனி நபர்களுக்கான வரிப்பலகை சரிசெய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதுள்ள வருமான வரி அமைப்பின் படி ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் பெறுபவர்களுக்கு 5 சதவிதம் வரி விகிதம் பொருந்துகிறது. ரூ.15 லட்சம் வருமானத்திற்கு 30 சதவீதம் வரை வரி உயர்கிறது.

இந்நிலையில் புதிய வருமான வரி அமைப்பின் கீழ், தற்போதுள்ள ரூ.3 லட்சத்தில் இருந்து வருமான வரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய நிதிஅமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News