இந்தியா

ஆந்திராவில் ஆட்டோ மீது பஸ் மோதி 7 தொழிலாளர்கள் பலி

Published On 2024-11-24 04:28 GMT   |   Update On 2024-11-24 04:28 GMT
  • ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.
  • போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாராயணன் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்லூர் அடுத்த எலுட்லாவை சேர்ந்த 13 தொழிலாளர்கள் திம்மம்பேட்டையில் உள்ள வாழைத்தோட்டத்தில் வேலைக்கு சென்றனர்.

நேற்று மாலை வேலை முடிந்து அனைவரும் ஒரே ஆட்டோவில் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.

தலைகாரி பள்ளி என்ற இடத்தில் ஆட்டோ வந்தபோது எதிரே வந்த ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது.

ஆட்டோவில் இருந்த நாகம்மா, ராமாஞ்சினம்மா, பாலபெத்தைய்யா மற்றொரு நாகம்மா உட்பட 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாராயணன் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரை சேர்ந்த 7 கூலி தொழிலாளர்கள் விபத்தில் பலியான சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News