இந்தியா

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்- மத்திய அரசு கணிப்பு

Published On 2023-01-07 03:10 GMT   |   Update On 2023-01-07 03:10 GMT
  • கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.157 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருக்கும்.

புதுடெல்லி:

நடப்பு நிதிஆண்டில் (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி துறையின் செயல்பாடு மந்தமாக இருப்பதே பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு காரணம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.157 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News