இந்தியா என்பது அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தடாலடி
- பாரத் அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான், பழங்காலத்திலிருந்தே நாம் இங்கு வாழ்கிறோம்.
- கிருஷ்ணர் நினைத்திருந்தால் போரை தடுத்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.
இந்தியா என்பது அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரான் [Baran] நகரில் நடத்த சுயம்சேவக் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா அல்லது பாரத் அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான், பழங்காலத்திலிருந்தே நாம் இங்கு வாழ்கிறோம்.
இந்து என்ற பதம் பலகாலம் கழித்தே வழக்கத்தில் வந்தது.இந்துக்கள் அனைவரையும் அரவணைப்பவர்கள், அவர்கள் ஒற்றுமையோடு வாழ்பவர்கள். சாதி, மதம், மொழி என்ற பாகுபாடுகளைச் சண்டைகளை மறந்து இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்.
ஆனால் அனைத்துக்கும் கடவுளை எதிர்பார்க்கும் பழக்கம் இந்துக்களுக்கு உண்டு. ஆனால் தனது பிரச்சனைகளைத் தானே கவனித்துக் கொள்பவர்களுக்குத்தான் கடவுள் உதவி செய்வார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் தயாராக இருந்ததை அறிந்தபின்னரே பகவான் கிருஷ்ணர் அவர்களுக்குத் தேர் ஓட்டினார்.
அவர் நினைத்திருந்தால் போரை தடுத்து அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் தங்களின் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் தான் முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பாரத மாதாவைக் காப்பாற்ற நாம் முயற்சி எடுத்தாக வேண்டும். அந்த முயற்சியில் நம்மோடு அனைவரையும் அரவணைத்துக்கொள்ள வேண்டும். அதுவே நமது கலாச்சாரம், பாரம்பரியம் என்று தெரிவித்தார்.