null
10 ஆண்டுகள் இலக்கு: பெட்ரோல், டீசல் கார்களுக்கு செக் வைக்கும் இந்தியா
- இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது.
- பிஜிலி மகாதேவ் ரோப்வே திட்டம் குறித்தும், அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.
உலகம் முழுக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக சர்வதேச எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை ஒவ்வொரு ஆண்டும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்தியாவிலும், தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களின் பயன்பாட்டை அடுத்த பத்து ஆண்டுகளில் முழுமையாக நீக்குவதற்கான பணிகளில் மும்முரம் காட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த வாரம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,
மின்சார வாகனங்களை நோக்கிய மாற்றத்தை வலியுறுத்தி, அடுத்த பத்தாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை ஒழிக்கும் அரசின் திட்டத்தை அறிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தில் போக்குவரத்துக்கான நீர் மின்சாரத்தின் சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்த அவர், பிஜிலி மகாதேவ் ரோப்வே திட்டம் குறித்தும், அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.
இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.