இந்தியா

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

வரும் நிதியாண்டில் 6.8 சதவீதம் வரை பொருளாதாரம் வளர்ச்சி அடையும்- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

Published On 2023-01-31 12:04 GMT   |   Update On 2023-01-31 12:04 GMT
  • மார்ச் 2023 இல் முடிவடையும் இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்
  • தொழில்நுட்ப நிறுவனங்களின ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதில், கொரோனா தாக்கத்திலிருந்து இந்தியாவின் பொருளாதாரம் மீண்டு வந்திருப்பதாகவும், வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6 முதல் 6.8 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்களின் அடிப்படையில் இந்த வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2023ல் ஜிடிபி உயர அதிக மூலதனச் செலவு முக்கிய காரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மார்ச் 2023 இல் முடிவடையும் இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்றும், 2024ல் 6.5 சதவீதமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22ல் 8.7 சதவீதமாக இருந்தது.

நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அடுத்த நிதியாண்டிற்கான வளர்ச்சி குறைவாக இருந்தாலும், மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சியை வேகமாக்கும். நவம்பர் 2022ல் ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பிற்குள் சில்லறை பணவீக்கம் திரும்பியுள்ளது.

சமீபத்திய வாரங்களில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

கடந்த 4 வருடங்களாக மருத்துவ துறைக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. மாநில - மத்திய பட்ஜெட்டில் 2023 நிதி ஆண்டில் மருத்துவத்துறைக்காக 2.1% ஒதுக்கப்பட்டது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News