இந்தியா

தவாங் செக்டாரில் சீன ராணுவம் அத்துமீறல் - முறியடித்த இந்தியா ராணுவம்

Published On 2022-12-12 15:09 GMT   |   Update On 2022-12-12 15:09 GMT
  • அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சியை இந்தியா முறியடித்தது.
  • கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இடாநகர்:

இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீன நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் அவ்வபோதும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. 300-க்கு மேற்பட்ட வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், மோதலுக்கு பிறகு இரு தரப்பு ராணுவத்தினரும் தங்கள் நிலைகளுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News