இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு
- இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.
- 2020 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர் வருண் குமார்.
இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் பெங்களூருவில் உள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் அடிப்படையில் ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் வருண் குமார் இடம் பெற்றிருந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
2021-ல் அர்ஜூனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போக்சோ தவிர்த்து மோசடி பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் அளித்த பெண் ஐதராபாத்தை சேர்ந்த கைப்பந்து வீராங்கனை ஆவார். இவருக்கு 17 வயதாக இருக்கும்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.