கனடாவில் மாரடைப்பால் இந்திய மாணவர் மரணம்
- நண்பரிடமிருந்து ஷேக் முஸமில் அகமது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக் முஸமில் அகமது (வயது 25). இவர் கனடா நாட்டில் ஒன்டாரியோவில் உள்ள கிச்சனர் சிட்டி கோனெஸ்டோகா கல்லூரியில் முதுகலை ஐ.டி. படித்து வந்தார். கடந்த பல நாட்களாக இவர் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது இறந்துவிட்டதாக அவரது நண்பரிடமிருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஷேக் முஸம்மில் அகமது உடலை விரைவில் ஹைதராபாத்திற்கு அனுப்புமாறு அவரது மாமாவும், தெலுங்கானா மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் என்ற அரசியல் கட்சி தலைவரான அம்ஜத் உல்லா கான் 'எக்ஸ்' இணையதளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் , இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளார். அதில் மாணவனின் உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Hyderabad student dies in Canada; Indian Embassy to send mortal remains homehttps://t.co/GTsh3Dr59o
— The Siasat Daily (@TheSiasatDaily) February 16, 2024