இந்தியா
null

கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை - என்ன காரணம் தெரியுமா?

Published On 2024-02-05 11:35 GMT   |   Update On 2024-02-05 11:40 GMT
  • இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுகிறது.
  • ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.

காலிஃபிளவர் கொண்டு செய்யப்படும் சுவையான உணவு வகை கோபி மஞ்சூரியன். உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமான உணவாக கோபி மஞ்சூரியன் விளங்குகிறது. இந்த நிலையில், கோபி மஞ்சூரியன் உணவிற்கு கோவா மாநிலத்தை சேர்ந்த நகரம் ஒன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மசாலா பொருட்கள் பூசப்பட்ட காலிஃபிளவரை எண்ணையில் பொரித்து, பிறகு பொரித்தெடுக்கப்பட்ட காலிஃபிளவரை காய்கறி வகைகள், பல்வித சாஸ் சேர்த்து சமைக்கப்படுவதே கோபி மஞ்சூரியன் என்ற பெயரில் காரசாரமாக பரிமாறப்படுகிறது. இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுவதே இதற்கு தடை விதிக்க காரணமாக கூறப்பட்டுள்ளது.

 


முன்னதாக 2022-ம் ஆண்டு கோவாவை சேர்ந்த மபுசா நகரில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, இந்த உணவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும், கடைகளில் இந்த உணவு ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.

மும்பையை சேர்ந்த நெல்சன் வாங் என்பவரே இத்தகைய உணவை கண்டறிந்தவர் என கூறப்படுகிறது. இவர் கோழி இறைச்சியை கொண்டு மஞ்சூரியன் செய்து 1970-க்களில் பரிமாறியதாக தெரிகிறது. பிறகு, இந்த உணவு காலிஃபிளவர் கொண்டும் சமைக்க துவங்கப்பட்டது. அந்த வகையில் கோபி மஞ்சூரியன், கோழி இறைச்சி வகைக்கு மாற்றான சைவ உணவாக மாறியது. 

Tags:    

Similar News