இந்தியா
null

வீட்டில் சமைப்பதை தவிர்க்கும் இந்தியர்கள்.. ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் ஒரு வருட லாபமே இவ்வளவா?

Published On 2024-11-11 06:50 GMT   |   Update On 2024-11-11 06:50 GMT
  • ஸ்விகி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களின் வருகை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்திய மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது.

இந்திய சமூகத்தில் சமீப காலமாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் முறை அதிகரித்து வருகிறது. மேல்தட்டு மக்கள் இடையே மட்டுமே இருந்து வந்த இந்த வழக்கம் தற்சமயம் நடுத்தர குடும்பங்கள் இடையேயும் பரவி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்விகி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களின் வருகை.

சிலிண்டர் டோர் டெலிவரி வாங்கி உணவு சமைத்து சாப்பிடுவற்கு பதிலாக உணவையே 10 நிமிடங்களில் டோர் டெலிவரி வாங்கி சாப்பிட்டுவிடலாமே என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். தற்கால கார்ப்பரேட் லைப் ஸ்டைலில் எதற்குமே நேரம் இல்லாதது போலவும், எல்லாமே எளிதில் கிடைக்கும்போது ஏன் சிரமப்பட வேண்டும் என்ற  பிம்பமும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வியாபார உத்தியால் நாளுமொரு புதிய நிறுவனம் உதித்த வண்ணம் உள்ளது.

 

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு புள்ளி விவரம் மேற்கூறியவற்றை உறுதி செய்வதாக உள்ளது. அதாவது, ஆன்லைன் ஸ்விகி [Swiggy], சோமாட்டோ[Zomato], பலசரக்கு டெலிவரி நிறுவனமான [Blinkit] மற்றும் [Zepto] ஆகிய 4 நிறுவனங்கள் சேர்ந்து கடந்த ஒரே வருடத்தில் 35,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன.

இது இந்திய மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது. நிறுவனங்களின் பசி, மக்களின் பசியை தீர்மானிக்கும் காலம் இது என சமூக ஆர்வலர்கள் நொந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News