சுவிஸ் வங்கியில் இந்தியாவின் நிதி கடந்த நான்கு வருடத்தில் 70 சதவீதம் குறைவு
- தனிநபர் மற்றும் என்ஆர்ஐ வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து குறிப்பிடவில்லை.
- 2021-ல் அதிக உயர்ந்த நிலையில், 2023-ல் நிதி குறைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள தனிப்பட்ட தொழில் அதிபர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்படுவது உண்டு. இந்தியா- சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அப்போது சுவிஸ் வங்கிகளில் எதிர்பார்க்கப்பட்டது போன்று பணம் பதுக்கு வைக்கப்படவில்லை எனத் தெரியவந்தது.
தற்போது சுவிஸ் வங்கியில் இந்தியாவின் நிதி நான்கு வருடத்தில் இல்லாத அளவிற்கு 70 சதவீதம் குறைந்துள்ளதாக சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது இந்திய பண மதிப்பில் 9771 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளது. 2021-ல் 3.83 பில்லியன் (சுவிஸ் பண மதிப்பு) ஆக இருந்தது. தற்போது 1.04 பில்லியனாக குறைந்துள்ளது.
வங்களில் டெபாசிட் செய்தல், இந்தியாவில் உள்ள மற்ற வங்கிகளில் இருந்து பணம் பரிமாற்றம் போன்றவை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதில், சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்திருப்பதாகக் கூறப்படும் கருப்புப் பணத்தின் அளவைக் குறிப்பிடவில்லை. இந்த புள்ளிவிவரங்களில் இந்தியர்கள், என்ஆர்ஐ-க்கள் அல்லது மூன்றாம் நாட்டு நிறுவனங்களின் பெயரில் சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கும் நபர்களின் பணமும் சேர்க்கப்படவில்லை.
2006-ல் 6.5 பில்லியன் சுவிஸ் பிரான்க்ஸ் (Swiss francs) ஆக இருந்தது. அதன்பின் 2011, 2013, 2017, 2020, 2021-ல் வெகுவாக குறைய ஆரம்பித்தது. 2022-ல் மட்டும் குறிப்பிட்ட அளவு உயர்ந்த என சுவிஸ் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.