சண்டைக்கோழி விற்பனை இவ்வளவு லட்சமா? வெளிநாட்டில் இருந்து வந்தது என ஏமாற்றும் அவலம்
- சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
- வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு எருது விடும் விழா பிரபலம் என்றால் ஆந்திராவில் சேவல் சண்டை பிரபலமாகும். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையின்போது கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
ஆந்திராவில் சண்டை சேவல்களுக்கு வைரஸ் மற்றும் சுவாச பிரச்சனை நோய் தாக்கப்பட்டு ஏராளமான சேவல்கள் இறந்தன.
இதனால் சேவல் வளர்ப்பவர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர். தற்போது சங்கராந்தி பண்டிகை நெருங்கி வருவதால் தரமான சண்டை சேவல்களின் விலை 30 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது சண்டை சேவல்கள் ரூ 2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து சேவல்களை வாங்கி வந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி மோசடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சேவல் வளர்ப்பவர் ஒருவர் கூறுகையில்:-
வெளிநாடுகளில் இருந்து சேவல்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து சேவல்கள் விற்பனை செய்தால் நம்முடைய கால சூழ்நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்து போகும் என கூறினார்.
சேவல்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதனுடைய எடை வேகம் சண்டையிடும் திறன் மட்டுமே வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.