இந்தியா (National)

விமான வெடிகுண்டு மிரட்டல்களுக்கும் இன்சூரன்ஸ் இருக்கா? நிபுணர்கள் சொல்வது இதுதான்..!

Published On 2024-10-25 14:28 GMT   |   Update On 2024-10-25 14:28 GMT
  • இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா ஆகியவை இதில் அடங்கும்.
  • டிக்கெட் புக்கிங் செய்யும்போது தேர்வு செய்யும் டிராவல் இன்சூரன்ஸ் இன் கீழ் வெடிகுண்டு மிரட்டல் காரணி உள்ளதா

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் 25 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மொத்தமாக கடந்த 12 நாட்களில் இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுள்ளது. இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா ஆகியவை இதில் அடங்கும்.

மிரட்டல்களால் விமான பயணிகள் அச்சத்துடனேயே இருக்கும் நிலையில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது தேர்வு செய்யும் டிராவல் இன்சூரன்ஸ் இன் கீழ்  வெடிகுண்டு மிரட்டல் காரணி  கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதுகுறித்து இன்சூரன்ஸ் துறை நிபுணர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.

 

Insurance Samadhan நிறுவனத்தில் துணைத் தலைவர் சில்பா அரோரா, தற்போதுள்ள இன்சூரன்ஸ் பாலிசிகள் போலியான வெடிகுண்டு மிரட்டல்களை உள்ளடியதில்லை. ஆனால் தற்போது இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் வெடிகுண்டு மிரட்டல் காரணியையும் டிராவல் இன்சூரன்ஸில் சேர்ப்பது குறித்து நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன என்று தெரிவிக்கிறார்.

Probus Insurance நிறுவனத்தில் இயக்குனர் ராகேஷ் சர்மா பேசுகையில், சம்பவங்களின் தீவீரத்தன்மையை பொறுத்தே இது சாத்தியப்படும். உதாரணமாக மிரட்டலால் விமான நிலையங்களே மூடப்படுவது, வெடிகுண்டு மிரட்டல்களை உறுதி செய்து அரசாங்கமே அறிவுறுத்தல்களை வெளியிடும்போது இது சாத்தியப்படும்.

உறுதிசெய்யப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு பின்னர் பயணி தங்களது டிக்கெட்டை ரத்து செய்தால் அவர்களுக்கு non-ரீபண்ட் தொகையும் திருப்பி வழங்கப்படும். நிலைமை குறித்து தொடர்புடைய ஏர்லைன்ஸ் மற்றும் ஆப்ரேட்டர்கள் கூறும் மதிப்பீடுகளை பொறுத்தே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே டிராவல் இன்சூரன்ஸில் வெடிகுண்டு மிரட்டல் காரணியையும் சேர்க்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News