அப்போ அயோத்தி.. இப்போ பத்ரிநாத்.. 'வெறுப்பு அரசியலை நிறுத்த பா.ஜக.வுக்கு செய்தி' - காங்கிரஸ்
- கடத்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர பண்டாரி மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு தாவினார்.
- வீடியோ ஒன்றை பகிர்ந்து, 'அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்தில் இருந்து பாஜகவுக்கு மீண்டும் செய்தி வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது
ஏழு மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேரத்ல் நடைபெற்றது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. மக்களவை தேர்தலைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.
1800 கோடி செலவில் பாஜக ராமர் கோவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகர் உள்ள பைசாபாத் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியிடம் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வி பாஜகவுக்கு பேரிடியாக அமைந்த நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக பத்திரநாத் தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்தது. ஆனால் கடத்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர பண்டாரி மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு தாவினார். இதனால் அங்கு இடைத்தேர்தல் தற்போது நடந்துள்ள நிலையில் கட்சி தவியதால் பண்டாரி மீதிருந்த மக்களின் நம்பிக்கை குலைந்து மீண்டும் காங்கிரஸ் அங்கு வென்றுள்ளது. இந்த வெற்றியை குறிப்பிட்டு காங்கிரஸ் தற்போது பாஜகவை விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் தனது அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, 'அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்தில் இருந்து பாஜகவுக்கு மீண்டும் செய்தி வந்துள்ளது. இப்போதாவது உங்களின் வெறுப்பு அரசியலை நிறுத்திக்கொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளது.
தற்போது காங்கிரஸ் சார்பில் நின்ற லக்பத் புடோலா பாஜக சார்பில் நின்ற பண்டாரியை 5,224 என்ற வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.